
இன்நிகழ்வின் போது பிரதம அதிதிகளாக இலங்கை நாட்டின் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ V.இராதாகிருஸ்ணன் அவர்களும், கிழக்கு மாகண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான கௌரவ S.தண்டாயுதபாணி அவர்களும், திகாமடுல்ல பாரளுமண்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் திருக்கோவில் வலய வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.எஸ்.சுகிர்தராஜன், மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு.S.ஜெயரூபன் அவர்களும், திருக்கோவில் வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர். திரு .குணாளன், திருக்கோவில் வலய கோட்டக்கல்வி அதிகாரிகளான திரு.S.தர்மபாலன், திரு.V.ஜெயந்தன், ஆகியோரும், மற்றும் பழைய மாணவர்சங்கத்தின் உப தலைவர் பி.பாலேந்திரகுமார், செயலாளர் ஆர்.ரதீசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பாடசாலையின் பிரதி அதிபர்,உப அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் .இராதாகிருஸ்ணன் அவர்களினால் தேசிய பாடசாலை என்ற பெயர் மாற்றப்பட்ட பெயர் பலகை திறக்கப்பட்டதுடன் பாடசாலையின் தமிழ் பண்பாட்டினை மிழிரச்செய்யும் வகையில் திருவள்ளுவர் சிலையும் கிழக்கு மாகண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான கௌரவ S.தண்டாயுதபாணி மற்றும் திகாமடுல்ல பாரளுமண்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒன்றுகூடல் மண்டபத்தில் தேசிய பாடசாலையாக கௌரவத்தினை பெறுவதற்கு சிபார்சுகளையும் முயற்களையும் மேற்கொண்ட கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் .இராதாகிருஸ்ணன் மற்றும் கிழக்கு மாகண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான கௌரவ S.தண்டாயுதபாணி மற்றும் திகாமடுல்ல பாரளுமண்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.எஸ்.சுகிர்தராஜன் ஆகியோரினை கௌரவிக்கும் நிகழ்வும்.
2014 ஆண்டில் பல்கலைக்கழகம் செண்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வும் இடம் பெற்றது. இதனை தொடர்ந்து மாணவ மாணவிகளின் நடனம், வில்லுப்பாட்டு ஆகிய கலை நிகழ்வுகளும், அதிதிகளின் உரையுடன் நன்றி உரையுடன் இனிதே நிகழ்வு நிறைவுற்றது.
Comments
அரசியல்,பொருளாதாரம்,கல்வி என்பனவற்றில் நெடும்காலம் தனித்துவிடப்பட்ட அம்பாறை மாவட்டத் தமிழினம், என்ன ஆயுதத்தைக் கையில் எடுத்தால் தனித்துவமாக நிலை நிற்கலாம் என்பதைத் தெரிந்துகொண்டு செயலூட்டம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர்க்கும், பக்கபலமாக இருந்து பங்களிப்புச் செய்யும் கல்விமான்களுக்கும், இனப்பற்றுமிக்கவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி!!
ReplyDeleteஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!