Contact Form

Name

Email *

Message *

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கணவன் கைது

திருக்கோவில் பிரதேசம்  தம்பிலுவில்  முனையக்காடு பகுதியில் மனைவியை கொலைசெய்த குற்றச்சாட்டில் நபரொருவர், கடந்த 15.07.2017 சனிக்கிழமை  காலை 9 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளாரெ…

Image
திருக்கோவில் பிரதேசம்  தம்பிலுவில்  முனையக்காடு பகுதியில் மனைவியை கொலைசெய்த குற்றச்சாட்டில் நபரொருவர், கடந்த 15.07.2017 சனிக்கிழமை  காலை 9 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.


குடும்பத்தில் ஏற்பட்ட குடும்பத்தகராறில்  காரணமாக, மனைவி மீது கணவன் தாக்குதல் நடத்தியுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர். மனைவியின் தலையில் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து ஸ்தலத்திலேயே மனைவி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில், ஒரு பிள்ளையின் தாயான 40 வயதுடைய இளையதம்பி யோகேஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை, திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may like these posts

Comments