நவராத்திரி நோன்பை முன்னிட்டு, தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கமானது, எதிர்வரும் ஞாயிறு (09.10.2016) காலை 10 மணி முதல் 12 மணி வரை, பாடசாலைக் கேட்போர் கூடத்தில் "வாணி விழா 2016"ஐக் கொண்டாடத் தீர்மானித்துள்ளது. அன்றைய பூசைக்குப் பொறுப்பான தரம் 8 மற்றும் 9 மாணவர்களுடன் இணைந்து நிகழ இருக்கும் இவ்வைபவத்தில், கலை நிகழ்வுகளும் ஆராதனைகளும் இடம்பெறும்.
பாடசாலையின் சகல பழைய மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்து, வாணியின் திருவருள்பெறுமாறு அன்போடு அழைக்கின்றோம்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!