Contact Form

Name

Email *

Message *

வரட்சியான காலநிலையால் இரட்டிப்பாகும் மரக்கறி விலைகள்

தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒருசில மரக்கறி வகைகளின் விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. நிலவும் வரட்சியால் மரக்கறி செய்கை பாதிக்கப்பட்டுள்ளமையே விலையேற்றத்திற்கு…

Image
தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒருசில மரக்கறி வகைகளின் விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.
நிலவும் வரட்சியால் மரக்கறி செய்கை பாதிக்கப்பட்டுள்ளமையே விலையேற்றத்திற்கு காரணமாகும்.
கிணற்று நீரை பயன்படுத்தி மரக்கறி செய்கைகளை பாதுகாப்பதற்கு விவசாயிகள் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட நேரிட்டுள்ளது.
எனினும் ஏற்கனவே பல்வெறு பகுதிகளிலும் மரக்கறி செய்கை அழிவடைந்துள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.
இந்த நிலையில் சந்தைக்கு கொண்டு வரப்படுகின்ற மரக்கறியின் அளவும் வெகுவாக குறைவடைந்துள்ளது.
இதனால் வழமைக்கு மாறாக மீண்டும் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால் பண்டிகை காலத்தில் பாதிப்புக்களை சந்திக்க நேரிடும் எனவும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

You may like these posts