Contact Form

Name

Email *

Message *

சூரியனை விட மிகப்பெரிய கிரகங்கள் 4 கண்டுபிடிப்பு

சூரியனை விட மிகப்பெரிய 4 கிரகங்களை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள சிலி நாட்டின், ‘போன்டிபிசியல் கேத்தலிக் யுனிவர்சிட்டி’ யைச…

Image
சூரியனை விட மிகப்பெரிய 4 கிரகங்களை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள சிலி நாட்டின், ‘போன்டிபிசியல் கேத்தலிக் யுனிவர்சிட்டி’ யைச் சேர்ந்த மத்தியாஸ் ஜோன்ஸ் என்பவர் தலைமையில் விண்வெளி ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது.
ஜோன்ஸ் தலைமையிலான குழுவினர், 1.5 மீட்டர், 2.2 மீட்டர், 3.9 மீட்டர் அளவுடைய தொலைநோக்கிகளை சிலி மற்றும் அவுஸ்திரேலிய ஆய்வகங்களில் நிறுவி விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
அப்போது சூரியனை விட மிகப்பெரிய 4 புதிய கிரகங்கள், விண்வெளியில் நட்சத்திரங்களை சுற்றிவருவதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கிரகங்கள் வியாழன் கிரகத்தை விட 2.4 முதல் 5.5 சதவீதம் வரை நிறை அதிகம் உடையவையாக உள்ளன.
மேலும், இந்த புதிய கிரகங்கள் 2 முதல் 4 பூமி ஆண்டு கணக்கில் நட்சத்திரங்களை சுற்றிவருவதும் தெரிய வந்துள்ளது.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களுக்கு இக்குழுவினர் எச்ஐபி 8541, எச்ஐபி 74890, எச்ஐபி 84056, எச்ஐபி 95124 என பெயரிட்டுள்ளனர்.
இவற்றில் முதலில் கூறப்பட்ட எச்ஐபி 8541 கிரகம்தான் மற்ற மூன்றை விட மிகப்பெரியது.
இது நட்சத்திரத்தை சுற்றிவர 1560 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இந்த கிரகங்கள் சுற்றிவரும் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் சூரியனை விட மிகப்பெரியவையாக இருக்கின்றன.

You may like these posts