
கிழக்கு மாகாணத்திலும் சகல பாடசாலைகளில் கல்வி அமைச்சினால் கடந்த 2017.07.28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று நோய் கட்டுப்படுத்தும் வகையில் டெங்கு ஒழிப்புச் சிரமதான தேசிய வேலைதிட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் திகோ/ தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யிலும் இக்கல்லூரியின் அதிபர் திரு.வ. ஜயந்தன் தலைமையில் இவ் டெங்கு ஒழிப்புத் வேலைதிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலையின் வெளிபுற பகுதிகள் வகுப்பறை பகுதிகள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் இணைந்து துப்பரவு பணிகளை மேற்கொண்டனர்.பாடசாலையின் சகல பகுதிகளும் முன்பு இருந்ததை விட தூய்மையாக்கப்பட்டன.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!