அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் உடும்பன்குளம் கிராமத்தில் 2015.09.17 வியாழக்கிழமை அதிகாலை ஆடுகளை திருடுவதற்கு சென்ற 04 பேரைக் கொண்ட குழுவினர், ஆடுகளின் உரிமையாளரை தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளமை தொடர்பில் தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியிலும் மோட்டார் சைக்கிளிலும் வந்த 04 பேர், ஆடுகளை பிடித்து முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். இதைக் கண்டு தடுப்பதற்கு முற்பட்ட தன்னை அவர்கள் தாக்கினர். இதன் பின்னர், அவர்கள் ஆடுகளை அவ்விடத்தில் விட்டிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார். இது தொடர்பில் திருக்கோவில் பொலிஸில் தான் முறைப்பாடு செய்ததாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். -