Contact Form

Name

Email *

Message *

பிரதேசவாதங்களை கைவிட்டு ஒற்றுமைப்பட வேண்டும்

தமிழ் மக்கள் தமது பிரதேசவாதங்களை கைவிட்டு இனரீதியாக ஒற்றுமைப்படும் போது நமது எதிரியின் பலம் குறைந்து நாம் பலம் பொருந்தியவர்களாக மாறுகின்ற போது எமது உரிமைகள்,சுதந்திரங்கள் மற…

Image
தமிழ் மக்கள் தமது பிரதேசவாதங்களை கைவிட்டு இனரீதியாக ஒற்றுமைப்படும் போது நமது எதிரியின் பலம் குறைந்து நாம் பலம் பொருந்தியவர்களாக மாறுகின்ற போது எமது உரிமைகள்,சுதந்திரங்கள் மற்றும் அழிவடைந்து போயுள்ள கல்வி,பொருளாதார வளங்களை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும் என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

 திருக்கோவில் மெ.மி.த.மகா வித்தியாலத்தில் 19.09.2015 சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இன்று தமிழர்களின் பிரச்சினையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

நல்லதொரு விடிவுக்கான வெளிச்சம் எம்மை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றது.நாம் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக யுத்தம் காரணமாக சந்தித்த வேதனைகள்,இழப்புக்கள் விசாரிக்கப்பட்டு நல்ல தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என நம்பப்படுகின்றது.

 தமிழ் மக்கள் கடந்த காலங்களில் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்த வேளையிலும் எமது தமிழ் இனம் இன்று வரை தமது இலட்சியப் பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கின்றது என்றால் அது எமது இன ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றியாகும். இதனைக் கருத்தில் கொண்டு ஒட்டு மொத்த வடக்கு,கிழக்கு தமிழ் மக்களும் ஒற்றுமையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்து பயணிப்பது காலத்தின் தேவையாகும் என்றார். 

You may like these posts