Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவிலில் மேலும் இருவர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்

தம்பிலுவிலில் மேலும் இருவர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் தம்பிலுவிலில் இன்று மேலும் இருவர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள…

Image
தம்பிலுவிலில் மேலும் இருவர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்



தம்பிலுவிலில் இன்று மேலும் இருவர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேசத்தில் அக்கரைப்பற்று சந்தையுடன் தொடர்புபட்ட கடைக்காரர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 29.11.2020 நேற்றையதினம் தம்பிலுவில் கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து இன்றைய தினம் அவருடன் தொடர்புகளை வைத்திருந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜன் பரிசோதனையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த 11.11.2020 அன்று முதலாவது தொற்றாளரும், 29.11.2020 நேற்றையதினம் மற்றுமொரு தொற்றாளரும், 30.11.2020 இன்றைய தினம் மேலும் இரண்டு பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இத்துடன் திருக்கோவில் பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்துள்ளது.



You may like these posts

Comments