Contact Form

Name

Email *

Message *

அம்பாறை மாவட்ட மக்களுடன் ஒரு நிமிடம் !

இனிய அன்பு நெஞ்சங்களே! அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி சிந்தாத்துரை ஜெகநாதன் ஆகிய நான் தாழ்மையுடன் தங்களிடம் எடுத்தியம்பும் விடயம் ப…

Image
இனிய அன்பு நெஞ்சங்களே!

அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி சிந்தாத்துரை ஜெகநாதன் ஆகிய நான் தாழ்மையுடன் தங்களிடம் எடுத்தியம்பும் விடயம் பகர்வதாவது யான் அவுஸ்திரேலியாவில் வதியும் போது கடந்த வருடம் வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் 5ந்தாவது மகா நாட்டின் பின் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், அம்பாறைவாழ் புத்திஜீவிகள், கற்றறிந்தவர்கள், மதத்தலைவர்கள், மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பட்டதாரிகள், கழகத்தலைவர்கள், உறுப்பினர்கள், அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் இதற்குமேலாக சகோதர இனங்களைச் சேர்ந்த என்னில், என் புனிதமான உணர்வுகளில் என்றும் நிறைந்திருக்கின்ற கட்சிக்காரர்கள் நண்பர்கள் மற்றும் அன்பர்கள் அனைவரின் அர்த்தபுஷ்டியான வேண்டுகோளினை நிராகரிக்க முடியாத ஒரு தர்மசங்கடமான நிலையில் எம் மாவட்ட மக்களின் உரிமைகள், நலன்களில் தீவிர கவனமும், அக்கறையும் கொண்டு நான் பயின்ற தொழில்சார் கல்வியை முன்னிறுத்தி எதிர்வரும் ஆவணித்திங்கள்  17ம் நாள் நடைபெறப்போகின்ற பொதுத் தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பாக வீட்டுச் சின்னத்திலும், 10 (பத்தாம்) இலக்கத்திலும் போட்டியிடுகின்றேன்.


இத் தேர்தலில் வாக்காளப் பெருமக்களிடம் விடுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள் யாதெனில் எனக்கு வாக்களிக்கப்பட முடியாது என்று தாங்களில் எவராவது நியாயம் காண்பிக்க முடியுமாயின் அவர்கள் தவிர்த்து ஏனைய அனைவரையும் எதிர்வரும் நாட்களில் தபால் மூல வாக்கில் எமது வீட்டுச் சின்னத்திற்கும்,  10 (பத்தாம்) இலக்கத்திற்கும் எதிரே தனித்தனியே இரு புள்ளடிகள் இடுவதன் மூலம் தங்களின் பொன்னான வாக்கு ஒன்று எனக்கு அளிக்கப்படும் மொத்தவாக்கின் எண்ணிக்கையை உயர்த்தும் என்ற எனது அசைக்கமுடியாத நம்பிக்கையை இவ் உலகில் உள்ள எச்சக்தியினாலும் பிரிக்கமுடியாது என்பதை இத்தேசத்திற்கும், சர்வதேசத்திற்கும் உரத்த குரலில் பறைசாற்றுமாறு தங்களை இருகரம் கூப்பி வேண்டிமுடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்.
இப்படிக்கு
உண்மையுள்ள
சி.ஜெகநாதன்
(சட்டத்தரணி)

You may like these posts

Comments