பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளை ஜூலை மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒருகோடியே 50 இலட்சத்து 44,491 வாக்குச்சீட்டுகள் இம்முறை அச்சிடப்படவுள்ளன.
இந்த உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகளை எதிர்வரும் 29 ஆம் திகதி தபாலில் அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது
அதற்கு மறுநாளான 30 ஆம் திகதிமுதல் வாக்குச்சீட்டு விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன தெரிவிக்கின்றார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய காப்புறுதிப் பொதிகளை இன்றைய தினம் தபால் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!