கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் கடந்த மாதம் திருகோணமலையில் நடாத்திய கிழக்கு மாகாண மட்ட கணித வினாடி வினாப்போட்டி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் இவ்வறிவித்தலை வலயங்களுக்கு அறிவித்துள்ளார். பதில் போட்டிகள் எதிர்வரும் 30ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். மேற்படி போட்டியில் முறைகேடுகள் குளறுபடிகள் இடம்பெற்றதாகக் கூறி முறைப்பாடுகள் எமக்கு கிடைத்தன. அதனை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு விசாரணைக்குழுவொன்றை நியமித்தோம். அக்குழு ஆராய்ந்து சமர்ப்பித்த அறிக்கையின்படி அப்போட்டி இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அதன்படி அது இரத்துச் செய்யப்பட்டது. அதற்கான பதில் போட்டிகள் இம்மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பில் நடாத்த திட்டமிட்டுள்ளதாக நிசாம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண கணித விநாடி வினாப் போட்டி இரத்து:பதில் போட்டிகள் 30 ஆம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடு
கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் கடந்த மாதம் திருகோணமலையில் நடாத்திய கிழக்கு மாகாண மட்ட கணித வினாடி வினாப்போட்டி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம…
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!