Contact Form

Name

Email *

Message *

"ஆய்வார்வலர்"நவநாயகமூர்த்தி

எமது பிரதேசத்து மூத்த எழுத்தாளர்களை,கலைஞர்களை,கவிஞர்களை முன்பு எமது இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளோம்.இன்று மேலும் ஒருவரை முன்னிலைப்படுத்துவதில் எமது இணையத்தளம் பெருமையடைக…

Image
எமது பிரதேசத்து மூத்த எழுத்தாளர்களை,கலைஞர்களை,கவிஞர்களை
முன்பு எமது இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளோம்.இன்று மேலும்
ஒருவரை முன்னிலைப்படுத்துவதில் எமது இணையத்தளம் பெருமையடைகிறது. திரு.நாகமுத்து.நவநாயகமூத்தி. தம்பிலுவிலை
சேர்ந்த இவர் கடந்த கால் நூற்றாண்டுகளாக எழுத்துத் துறையில் கட்டுரையாளராகவும்,ஆய்வாளராகவும்,கவிஞராகவும்,பாடலாசிரியராகவும்,
பல ஆய்வு நூல்களின் ஆசிரியராகும் இருக்கிறார்,திருக்கோவில் பிரதேசம் ,
தம்பிலுவில் கிராமத்தில் 1948ல் பிறந்தவர். தனது ஆரம்ப கல்வியை தம்பிலுவில் கிழக்கு பாடசாலையிலும்,(சரஸ்வதி வித்தியாலயம்) உயர்கல்வியை தம்பிலுவில் மகாவித்தியாலயத்திலும் கற்றவர்.1971ல்
அக்கரைப்பற்று தெற்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் காசாளராக பதவியில் இணைந்த இவர் 1973ல் பனங்காட்டில் கங்கேஸ்வரியை திருமணம்
செய்துகொண்டார்.எளிமையும்,பணிவும்,அன்பும்,அடக்கமும் கொண்டவர்.
சின்ன வயசிலிருந்தே வாசிப்பில் நாட்டம்கொண்ட இவர், பல இலக்கிய,
ஆய்வு நூல்களை படித்ததினால் எழுதவேண்டும் என்ற ஆர்வம் கொண்டார்.

அந்தவகையில் அவர் பல ஆய்வு கட்டுரைகளை எழுதினார்,குறிப்பாக
1,மண்முனையிலிருந்து ஆட்சி புரிந்த உலக நாச்சியார்..
2,வேதகாலம் முதல் வரலாற்று காலம்வரை வாழ்ந்த அகத்தியர்கள் ..
3,கி.பி.மூன்றாம் நாலாம் நூற்றாண்டுகளில் கிழக்கில் இந்துமதம்.
4,பண்டைய ஈழக்குடிகளிடையே முருக வழிபாடு..(கி.மு.700-கி.பி.1)
5,தொன்மைமிகு தமிழ் இலக்கிய பாரம்பரியம்
6,சங்குமான் கண்டி பிள்ளையார் ஆலயம்,(தோற்றம்,வளர்ச்சி,வழிபாடு )
7,இலங்கை வழிபாட்டில் பனங்காடும்,அய்யானார் வழிபாடும்,
8,முருகக் கடவுள் உகந்திருக்கும் உகந்தைமலை..
9,அம்பாறை மாவட்டத்தில் மறைக்கப்பட்ட இந்து ஆலயங்கள்..
10,கிழக்கிலங்கை கூத்து மரபு ..
இப்படி இன்னும்பல ஆய்வு கட்டுரைகளை இவர் ,மருதநிலா,இந்துநதி,
சுத்தானந்தம்50,கலச்செல்வி ,ஏர்முனை போன்ற இலக்கிய விழா மலர்களில்
எழுதி கலைப்பணி ஆற்றினார்.1993,94 ல் திருக்கோவில் பிரதேசம் தம்பிலுவிலில் இருந்து வெளிவந்த "திரு ஒளி "சஞ்சிகை,திருநாவுக்கரசு
நாயனார் குருகுல சிறப்பு மலர்களிலும் இவரது ஆய்வுக் கட்டுரைகள் பல
பிரசுமாகி உள்ளன.
இவர் இதுவரை ஏழு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.அவை.
1,தமிழரும்,முருக வழிபாடும் ,
2,தொல்லியல் சிந்தனைகள்,
3,பண்டைத்தமிழ் பண்பாட்டுக் கோலங்கள்,
4,பண்டைய ஈழத் தமிழர்,
5,தம்பிலுவில் கண்ணகை வழிபாடு,
6,ஈழத்தமிழர் வரலாற்று சுவடுகள்,
7,பழந்தமிழர் நடுகற் பண்பாடு.
விரைவில் வெளிவர இருக்கும் நூல்கள்..
1,திருக்கோவில் பிரதேச இலக்கிய வரலாறு..
2,ஈழத்தில் பத்தினி வழிபாடும்,கண்ணகை அம்மன் வழிபாடும்,
3,திருக்கோவில் பிரதேச கலைகள்.(ஆய்வு)
இவர் பெற்ற விருதுகள்..
"ஆய்வார்வலர்"-இந்துசமய கலாச்சார சங்கம் 1993
"சிறந்த இந்துசமய நூலாசிரியர்"-கலாச்சார சமய அலுவல்கள் அமைச்சு 1996
மற்றும் சாகித்ய மண்டல பரிசு 1999.
இன்னும் பல இலக்கிய பரிசுகளும்,விருதுகளும் இவர் பெற்று இருக்கிறார்.
இது தவிர திரு நவ நாயக மூர்த்தி அவர்ககள் பல மெல்லிசை பாடல்களையும்
இலங்கை வானொலிக்காக எழுதியுள்ளார்.இலங்கை தேசிய தொலைக் காட்சியிலும் இவரது பாடல்கள் இடம்பிடித்திருக்கின்றன,
இப்படி பல்துறை கலைஞரான எமது மண்ணின் மைந்தன் திரு.நாகமுத்து
நவநாயகமூர்த்தி அவர்களை மேலும் பல ஆய்வுகள் செய்து எமது பகுதி
வரலாறுகளை வெளிக்கொணர வேண்டும் என்று எம் இணையத்தளம் வாழ்த்துகிறது.தகவல்கள் தந்த  ந.பிரசன்னா அவர்களுக்கு நன்றிகள்.

You may like these posts