(திருக்கோவில் தம்பி)
திருக்கோவில் பிரதேசத்தில் திருக்கோவில் 1ஆம் கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து ஆண் சிறுத்தைப் புலி குட்டி ஒன்று (03.03.2013 ஞாயிறு) கண்டுபிடிக்கப்படது. இதனை தம்பிலுவில் வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தின் அதிகாரி ஏ.ஏ.ஹலிம் அவர்களின் ஊடாக அம்பாறை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள மிருக பாதுகாப்பு அதிகாரி கித்சிறி குழுவினரால் பிடிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சிறுத்தைப் புலி குட்டி கிணற்றினுள் நீந்துவதை படத்தில் காணலாம் படம் திருக்கோவில் தம்பி

