திருக்கோவில் கல்வி வலய பாடசாலைகள் தொடர்ந்து இன்றும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்துவரும் தொடர் அடை மழையின் காரணமாக பாடசாலைகளினுள் வெள்ளநீர் தேங்கி காணப்படுவதனால் திருக்கோவில் கல்வி வலயத்தில் காணப்படும் அநேகமான பாடசாலைகள் தொடர்ந்து இன்றும் இரண்டு நாட்களாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மூடப்படும் பாடசாலைகளாக திகோ/ தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம், திகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம், திகோ/ திருக்கோவில் மெதடிஸ்த மிசன் வித்தியாலயம், திகோ/ விநாயகபுர மத்திய மகா வித்தியாலயம் ஆகிய முதல்தர பாடசாலைகள் உட்பட ஏனைய பாடசாலைகள்.


