(திருக்கோவில் தம்பி)
தேசத்திற்கு மகுடம் வேலைத் திட்டத்தின் கீழ் பொது மக்கள் இலகுவாக தேசி அடையாள அட்டை,தொலைந்த சாரதி அனுமதிப்பத்திரம்,கடவுச் சீட்டு போனற ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் சனி 16.02.2013 காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் பொலிஸ் நடமாடும் சேவையானது எதிர்வரும் 02.03.2013 சனி கிழமை வரை இரண்டு கிழமைக்கு நடைபெறவுள்ளன.இவ் நடமாடும் சேவை திருக்கோவில் இரண்டாம் பிரிவில் உள்ள மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக உள்ள கிராம அபிவிருத்தி (RDS) கட்டிடத்தில் தனியான பொலிஸ் நடமாடு வேவை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இவ் நடமாடும் சேவையானது திருக்கோவில் பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகார் டி.எம்.யு.வி.தென்னக்கோன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றுவருகின்றன.இவ் நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் ஐ.எம்.கருணாரத்தின திருக்கோவில் பிரதேச செயலாளர் எம். கோபாலரெத்தினம், கெப்சோ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டு நடமாடும் சேவை ஆரம்பித்து வைத்தனர்.
