Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள்

(திருக்கோவில் தம்பி) திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் அடைமழை வெள்ளத்துக்கு பிந்திய பொது சுகாதார சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும் வகையில் திர…

Image

(திருக்கோவில் தம்பி)
திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் அடைமழை வெள்ளத்துக்கு பிந்திய பொது சுகாதார சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும் வகையில் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி ஏ.உதயசுரியா அவர்களின் நெறிப்படுத்தலின் ஊடாக சுகாதார பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை திருக்கோவில் பிரதேசத்தில்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வருடத்தில் ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக அடைமழை பெய்ந்ததன் காரணமாக திருக்கோவில் பிரதேசத்தில் பல கிராமங்களில் குடிநீர்கிணறுகள் பாவணையற்ற காணிகள் பொது இடங்கள் மற்றும் வடிகான்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வெள்ளநீர் நிரம்பி காணப்படுகின்றன இதனை கவணத்தில் கொண்டு அவற்றின் ஊடாக பரவக்கூடிய தொற்று நோய்களை தடுக்கும் வகையில் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அவர்களும் உத்தியோகத்தர்களும் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று  குடிநீர்கிணறுகளுக்கு குளோரின் தூள் விநியோகித்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு; வருகின்றார்.




You may like these posts