(திருக்கோவில் தம்பி)
-பிரதேச செயலாளர் தலைமையில் -
இலங்கை ஐனநாயக சோசலிச முடியரசின் 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 4ம் திகதி (திங்கள்) திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் அவர்களின் தலைமையில் காலை 8.15 மணிக்கு செயலக முன்றலில் தேசிய கொடி ஏற்றி நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக தேசிய சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் அவர்கள் தெரிவித்தார்.அன்றைய தினம் மின்ஒளி விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றி தேசிய கீதம் இசைத்து 65வது சுதந்திர தினம் சம்மந்தமான செற்பொழிவுகளும் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதுடன் பிரதேசத்தில் பல இடங்களில் டெங்கு சிரமதானங்களும் இடம்பெறவுள்ளதாக மேலும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
இவ் சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள இந்து கிருஸ்தவ ஆலயங்களிலும் பூiஐ வழிபாடுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் அன்றை தினம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரச அரசசார்பற்ற திணைக்களங்களிலும் நிறுவனங்களிலும் சுதந்திர தின நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
