தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி - 2013ன் இறுதி நாள் நிகழ்வுகள் 2013.02.08 இன்று பிற்பகல் 2.30மணிக்கு வித்தியால அதிபர் திரு.S.இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வின் போது பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. சுகிர்தராஜன் மற்றும் கௌரவ அதிதிகளாக திருக்கோவில் பிரதேச பிரதேச செயலாளர் கலாநிதி.M.கோபாலரெத்தினம், அம்பாரை மாவட்ட ஜனாதிபதியின் இணைப்பாளர் Dr.K.புஸ்பகுமார், விசேட அதிதிகளாக திருக்கோவில் பிரதேச M.O.H அதிகாரி Dr.A. உதயசூரிய, திருக்கோவில் வலையக்கல்வி கணக்காளர் திரு.M கேந்திரகுமூர்த்தி, திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி T.M.U.B தென்னக்கோன், காஞ்சிரங்குடா இராணுவப் பாதுகாப்புப்படை பொறுப்பதிகாரி மேஜர்.D.U வீரசிங்க, ஏனைய கல்வி சார் மற்றும் கல்விசாரா அதிகாரிகள் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இவ் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் 464 புள்ளியை பெற்று வள்ளுவர் இல்லம் 1ம் இடத்தினையும், 451 புள்ளியை பெற்று இளங்கோ இல்லம் 2ம் இடத்தினையும், 438 புள்ளியை பெற்று கம்பர் இல்லம் 3ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.





















