(திருக்கோவில் தம்பி )
திருக்கோவில் பொலீஸ் பிரிவுக்குற்பட்ட விநாயகபுரம் -02 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 06 பிள்ளைகளின் தந்தையான நாகமணி செல்வராசா வயது 55 என்ற மீனவர் கடந்த 06ம் திகதி(ஞாயிறு) மாலை நீரில் முழ்கி மரணமானார்.
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியான மழை காரணமாக அனைத்து முகத்துவாரங்னளிலும் நீர் நிரம்பி வழிகிறது.இந்த சந்தர்ப்பத்தில் மேற்படி மீனவர் தனது தோணியில் விநாயகபுரம் முகத்துவாரத்தை கடக்க முற்பட்ட வேளை தோணி நீரில் முழ்கி மீனவர் உயிர் இழந்துள்ளார்.
இவரின் சடலம் 06ம் திகதி கடலில் இருந்து மீற்கப்பட்டுள்ளது.இது சம்மந்தமான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
