(திருக்கோவில் தம்பி)
மலர்ந்துள்ள 2013 ம் ஆண்டை வரவேற்றும் விடைபெற்றுச் சென்றுள்ள 2012 ம் ஆண்டுக்கான விடுகை விழாவும் திருக்கோவில் பிரதேசத்தில் கொண்டாடப்பட்டது.
கலாநிதி எம்.கோபாலரெத்தினம் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இங்கு தமிழர் பண்பாட்டு கலை கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.இதில் அம்பாறை மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட காவடி கரகாட்டம் முதலாம் இடத்தைப் பெற்ற கலைநிகழ்சியும் இங்கு அரங்கேற்றப்பட்டன.இந் நிகழ்ச்சி பிரதேச உத்தியோகத்தர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதுடன். கோகுலத்தில் கிஷ்ணன் என்ற கலை நிகழ்ச்சியும் பார்வையாளர்களின் கண்களின் புருவங்களை உயர்த்தி வைத்தது.
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொ.பியசேன அவர்களும் அம்பாறை மாவட்ட ஐனாதிபதியின் இணைப்பாளர் கே.புஸ்பகுமார் (இனியபாரதி) மற்றும் பிரதேச செயலாளர் எம். கோபாலரெத்தினம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.அங்குபல கலைகலாசார நிகழ்வுகவுகளும் இசைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றது