Contact Form

Name

Email *

Message *

நல்லது நடக்கட்டும்....

அன்பான திருக்கோவில் பிரதேச மக்களே! நாளை நடைபெற இருக்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத ஆலயத்தின் மகாசபை கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுங்கள்... குறிப்பாக பிரதேசத்தி…

Image

அன்பான திருக்கோவில் பிரதேச மக்களே!
நாளை நடைபெற இருக்கும் திருக்கோவில்
ஸ்ரீ சித்திரவேலாயுத ஆலயத்தின் மகாசபை
கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுங்கள்...
குறிப்பாக பிரதேசத்தில் உள்ள அனைத்து
இளையோர் அமைப்புகளும், சமூக தொண்டு
நிறுவனங்களும்,சத்தியத்துக்குள் வாழும் சகலரும்
கண்டிப்பாக கலந்துகொண்டு கோவில் நிர்வாகத்தினரின்
நடவடிக்கைகளை,அறிக்கைகளை,செயல்பாடுகளை,
கணக்குவழக்குகளை ஆராய்ந்து உங்கள் கருத்துக்களை,
கண்டனத்தை,பதிவு செய்வதோடு மட்டுமல்லாமால்
ஆலயத்தின் மேம்பாட்டிற்கும்,சிறப்புக்கும்,தடையாக,
முட்டுக்கட்டையாக இருக்கும் நிர்வாகத்தினரை விலக்கி வையுங்கள்.
 இலங்கையிலே இருக்கின்ற ஐந்து திருப்படைக் கோவில்களில்
முதற்படைக் கோவிலாக எமது கோவில் இருப்பதும்,வரலாற்று சிறப்புமிக்க
கோவிலாக இருப்பதும் நிர்வாகத்தில் இருப்பவர்களில் எத்தனை பேருக்கு
தெரியுமோ தெரியாது.....இல்லாவிட்டால் நேற்றுமுளைத்த கோவில்களுக்கெல்லாம்
இராஜகோபுரம் எழுப்பப்பட்டு கோபுர தரிசனம் செய்ய வாய்ப்பு இருக்கும்போது
மூர்த்தி,தலம்,தீர்த்தம் என்று அனைத்து சிறப்புகளையும் கொண்ட கோவிலுக்கு
இன்றுவரை இராஜகோபுரம் இல்லாமல் இருப்பது வேதனைக்குரியதும்,
வெட்கப்பட கூடியதுமான விடயமாகவே நாம் பார்க்கலாம்... ஏதோ  யார் புண்ணியத்திலோ
தொடங்கப்பட்ட ராஜகோபுர கட்டுமானங்களும் இடையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு நிர்வாகத்தினர் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?
கோவில் சொத்தை, அதன் வருமானத்தை, மற்றும் கோவிலுக்காக சேரும் அன்பளிப்புகளை,
நன்கொடைகளை எவ்வாறு நிர்வாகம் செலவுசெய்கிறது ? மக்களுக்கு தெரியப்படுத்த
வேண்டும். வெறுமனே குத்துமதிப்பாக கணக்கு சொல்லிவிட்டு தப்பித்துப்போக இம்முறை
விடவேண்டாம்.அனைத்து கணக்குவழக்குகளும் அச்சடித்து பொதுமக்களின் பார்வைக்கும்,
இணையத்தளங்களிலும்,ஊடகங்களிலும் தெரியப்படுத்தவேண்டும் என்று இந்த
மகாசபை கூட்டத்தில் வலியுறத்த வேண்டிய கடமை நான் மேலே குறிப்பிட்ட
அமைப்புகளுக்கும்,ஆர்வலர்களுக்கும் உண்டு என்பதை மறவாதீர்கள்.
திருக்கோவில் முருகன் கோவிலை, அதன் சிறப்பை,அதன் வரலாற்றை எங்கள்
பாடல்கள் மூலம் நாங்கள் உலகிற்கு சொல்கிறோம்.ஆனால் அதன் தற்போதைய நிலையை
யாரிடம் எப்படி சொல்வது?
ஆழிப்பேரலையின் அனர்த்தத்தினால் சேதமடைந்த முருகனின் வாகனங்களை திருத்த
அனுப்பிய பணம் என்னாச்சு? மற்றும் பல கணக்குகள் மண்ணாச்சி  என்று வெளியில்
சொல்லமுடியுமா?ஒரு  நிர்வாகம் நன்றாக இருந்தால்த்தான் எந்த அமைப்பும் நிறைவாக
இருக்கும்.அந்த நிர்வாகத்தை வழிநடத்தும் தலைமை முதலில் நன்றாக இருக்கவேண்டும்.
ஆக,இம்முறை நடக்க விருக்கும் மகாசபை கூட்டத்தில் பல விடயங்களை பொதுமக்களும்
இளையோர் வட்டங்களும்,சமூக தொண்டர், ஆர்வலர்கள் உட்பட அனைத்து தரப்பினரும்
எடுத்து பேசுவார்கள், கேள்விகள் கேட்பார்கள் என்று புலத்தில் வாழும் ஊர் மக்களும்,
ஊரிலுள்ளவர்களும் எதிர்பார்க்கிறார்கள். நல்லது நடக்கட்டும்....
 

You may like these posts