அசுரனை அழித்திட்ட கரங்கள்...
கொண்டவன் எங்கள் முருகேசன்...
நின்றவன் நேரில் கதிரேசன் ..
திருக்கோவில் பதிவாழும் வேல்நேசன்
சூரசம்ஹார உமைபாலன் ...
சந்தண மணத்துடன் இருப்பான்....
சந்ததம் எமக்கருள் தருவான்...
சுந்தர முகத்தான் முருகையன்...கந்த
சஷ்டியின் நாயகன் கந்தையன்,,,
தந்திடுவான் வரம் வேலையன்
நாகர்முனை வந்து இருந்தான்...வெள்ளை
நாவல்மரம்மீது அமர்ந்தான்...
வேண்டியபொழுதே வேலையன் ,,,
வேலைக் கிழக்காக வைத்தானே
வேலை (கடல்)அவன் பார்த்து இருந்தானே...
(வேறு ) கந்தசஷ்டி விரத பக்தர்கள் குறைகள்
கண்டிப்பாக அவன் தீர்ப்பான்.....
எந்த துன்பங்கள் வந்தாலும் அவன்
எங்களை என்றும் காப்பான்.......
எம்மை துயர்தனிலிருந்து மீட்பான்
