Contact Form

Name

Email *

Message *

ஈழத்துச் சீரலைவாயில் இடம்பெற்ற சூரன் போர்!

இலங்கையின் செந்திற்பதி என்று போற்றப்படும், திருக்கோவில் அருள்மிகு சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் சூரசங்காரப் பெருவிழா, கந்த சட்டி விரதத்தின் இறுதிநாளான இன்று 19ஆம் திகதி,…

Image
இலங்கையின் செந்திற்பதி என்று போற்றப்படும், திருக்கோவில் அருள்மிகு சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் சூரசங்காரப் பெருவிழா, கந்த சட்டி விரதத்தின் இறுதிநாளான இன்று 19ஆம் திகதி, (திங்கள்) மாலை, மிகுந்த கோலாகலமாக இடம்பெற்றது.

 மும்மலங்களின் உருவகமான தாரகன், சிங்கமுகன், சூரபதுமன் ஆகியோரின் வலிகெடுக்கும் நிகழ்வே சூரன் போர் ஆகும்.

முதலிரு மலங்களினதும் உருவகமான யானைத்தலை, யாளித்தலை அறுக்கப்பட்ட பின், தீ, இருள் என்பவற்றில் மறைந்தவண்ணம் சூரன் போரிடுவதும், பின்னர், அவன் மாமரமாய் நின்றதும், முருகப்பெருமான்  வேலாயுதத்தால் அவனை இருகூறாக்கி சேவலும் மயிலுமாக்கி தன்னிடம்  ஏற்றுக்கொண்டதும்  உருவகிக்கப்பட்டு, சூரசங்காரம் நிகழ்த்தப்பட்டது.

வழக்கம் போல, இம்முறையும், தென்கிழக்கிலங்கையைச்  சேர்ந்த நூற்றுக்கணக்கான அடியவர்கள் இந்நிகழ்வில்  கலந்துகொண்டனர்.

(சூரசங்காரத்தின் காணொளி(video), விரைவில் நமது வலைத்தளத்தில் பதிவேற்றப்படும்.)











                                                                               

You may like these posts