(தம்பையா)திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் நிலத்தில் புதைத்துவைக்கப்பட்ட கிளைமோர் குண்டுமற்றும்; கைக்குண்டுகள் நேற்று சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்
கொழும்பு தலைமையக சி ஜ டி யினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து முன்னாள் விடுதலைப் புலிகளில் இருந்து புனர்வாழ்வு பெற்று வந்த கோமாரி பிரதேசத்தைச் சேர்ந்த கிரிஸ்டியை கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் கைது செய்து விசாரணையின் போது விநாயகபுரம் பிரதான வீதியில் உள்ள மற்றுமொரு விடுதலைப் புலிகளில் இருந்து புனர்வாழ்வு பெற்றவர் வீட்டில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 18 கிலோ நிறை கொண்ட கிளைமோர் குண்டு ஒன்றும் கைக்; குண்டுகள் இரண்டும் நேற்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் சி ஜ டி யினர் மீட்டுள்ளனர்
இச் சம்பவத்தையடுத்து விடுதலைப்புலிகளில் இருந்து புனர்வாழ்வு பெற்று வெளியல் வந்த விநாயகபுரத்தைச் சேர்ந்த கோனேஸ் உட்பட நான்கு பேரை சி ஜ டி யினர் கைது செய்து விசாரணை மேற் கொண்டுவருகின்றனர் என சி ஜ டி யினர் தெரிவித்தனர்