திருக்கோவில் அருள்மிகு சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த கந்தசட்டிப் பெருவிழா, கடந்த 14ஆம் திகதியிலிருந்து, நடைபெற்று வருகிறது. நோன்பின் நான்காம் நாளான இன்று 17ஆம் திகதி (சனிக்கிழமை), வழக்கம்போல, கந்தபுராணம் ஓதுதலும், அதைத்தொடர்ந்து, இறைவன் திருவீதியுலாவும் இடம்பெற்றது.
ஆறாம் நாளான, நாளை மறுநாள் 19ஆம் திகதி (திங்கட்கிழமை), இத்தலத்துக்குச் சிறப்புச் சேர்க்கும் சூரசங்காரப்பெருவிழா கோலாகலமாக இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய திருவிழாவில்
எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்:









