கந்தசட்டி விரதம், எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி (புதன்கிழமை ) ஆரம்பிப்பதை முன்னிட்டு, ஆலயங்களில் கந்தசட்டி விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நிகழ்ந்து வருகின்றன.
“ஈழத்துச் சீரலைவாய்”
எனப்புகழ் பெற்ற, திருக்கோவில் அருள்மிகு சித்திரவேலாயுத
சுவாமி ஆலயத்திலும், பாணமைப்பற்று உகந்தமலை முருகன் ஆலயத்திலும், தம்பட்டை ஆறுமுகசுவாமி ஆலயத்திலும், தொடர்ந்து ஆறுநாட்கள்
கந்தபுராணம் படித்தலும், எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி (திங்கட்கிழமை), சூரன்போரும்
இடம்பெற இருக்கின்றது.
நவம்பர் 20ஆம்
திகதி (செவ்வாய்), இடம்பெறும் திருக்கல்யாண வைபவத்துடன், கந்தசட்டி விழா இனிதே நிறைவுற
இருக்கின்றது.
கிழக்கிலங்கை ஆலயங்கள்,
இவ்வாண்டு கந்தசட்டியை, வாக்கிய பஞ்சாங்கத்தை அனுசரித்தே கடைப்பிடிப்பது என்று அண்மையில்
எடுக்கப்பட்ட முடிவின்படி, (இலங்கைநேரம்) ஞாயிறு பிற்பகல் 5.27 முதல், திங்கள் பிற்பகல்
3.47 வரை “சட்டி திதி” எனக்கொள்ளப்பட்டு, திங்கள் மாலை, சூரசங்காரம் நிகழ்த்தப்படும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

