வானிலை சாதகமான நிலையை அடைந்ததை அடுத்து, நமது பகுதியிலும் நெல் அறுவடைப் பருவம் ஆரம்பமாயிற்று.
பாரம்பரியப்படி, கடந்த தைப்பூசத்தை அடுத்து அறுவடை ஆரம்பமான போதும், இரு நாட்களுக்கு முன் பெய்த பெருமழையால், அறுவடை நடவடிக்கைகள் ஸ்தம்பித்திருந்தன. இந்நிலையில், மழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் வடிந்துவருவதைத் தொடர்ந்து, அறுவடைப்பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பருவப்பிறழ்வால் ஏற்பட்ட வரட்சி, திடீர் மழையாலேற்பட்ட வெள்ளம், எபொருள் விலையேற்றம், வேளாண்மை வெட்டும் இயந்திரங்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு என்பன காரணமாக வர்த்தகச் சந்தையில், நெல்லின் விலை, தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்த நிலையிலேயே காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
