Contact Form

Name

Email *

Message *

சின்னமுகத்துவாரத்தில் 620 கிராம் கஞ்சாவுடன் போதைப்பொருள் வியாபாரி பொலிஸாரால் கைது

சின்ன முகத்துவாரப் பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை 620 கிராம் கஞ்சாவுடன் கடந்த திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பெருங்குற்றத்தடுப்பு பொலிஸ் அ…

Image
jailசின்ன முகத்துவாரப் பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை 620 கிராம் கஞ்சாவுடன் கடந்த திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பெருங்குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரி கமகே ஜேதிரத்தின தெரிவித்தார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றினையடுத்து சின்னமுகத்துவாரப் பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் நீண்டகாலமாக கஞ்சாவை விற்பனை செய்துவந்த பிரான்சிஸ் மகேஸ்வரன்(46 வயது ) என்பவரை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். இவரை அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may like these posts

Comments