| கடலில் நேற்று செவ்வாய்க்கிழமை குளிக்கச்சென்று காணாமல் போன இரு இளைஞர்களில் ஒருவரின் சடலத்தை பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர். |
| பதுளையைச் சேர்ந்த வி. செல்வக்குமார் (வயது 21) என்ற இளைஞனின் சடலத்தையே இன்று காலை 9.10 மணியளவில் திருக்கோவில் பொலிஸார் மீட்டுள்ளனர். குளிக்கச்சென்ற இடத்திலிருந்து ஒரு மைலுக்கு அப்பால் மேற்படி இளைஞனின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விளைஞனின் சடலம் திருக்கோவில் பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை திருக்கோவில் கடலுக்குச் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் காணாமல் போனதுடன் அவர்களிள் ஒருவரே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றைய இளைஞனின் சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுப்பட்டுவருகின்றனர் |
தம்பிலுவில் கடலில் குளிக்கச்சென்று காணாமல் போன இருவரில் ஒருவரின் சடலம் மீட்பு
கடலில் நேற்று செவ்வாய்க்கிழமை குளிக்கச்சென்று காணாமல் போன இரு இளைஞர்களில் ஒருவரின் சடலத்தை பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர். பதுளையைச் சேர்ந்த வி. செல்வக்குமார் (வயது 21) எ…
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!