Contact Form

Name

Email *

Message *

ஒலுவில் துறைமுகத்தில் முக்கிய பகுதியில் தேங்கியுள்ள மணலை அகற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, ஒலுவில் துறைமுகத்தில் முக்கிய பகுதியில் தேங்கியுள்ள மணலை அகற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Image
அம்பாறை, ஒலுவில் துறைமுகத்தில் முக்கிய பகுதியில் தேங்கியுள்ள மணலை அகற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் அமைச்சரவையின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன ,இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஒலுவில் துறைமுகத்தில் முக்கிய பகுதியில் மணல் நிறைந்திருப்பதால் கடற்றொழில் வள்ளங்கள் இத்துறைமுகத்திற்குள் உள்வாங்கப்படுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றது. இதனால் இப்பகுதியில் கடற்றொழிலாளர்கள் அன்றாட ஜீவனோபாயத்தை முன்னெடுப்பதற்கு தடை ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய கடற்றொழில் வள்ளங்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படாத வகையில் துறைமுக பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், துறைமுக முக்கிய பகுதியில் தேங்கியுள்ள மணலை ரோஜர் இயந்திரத்தைப் பயன்படுத்தி அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனை அறிந்துகொள்வதற்காக துறைமுகம் மற்றும் கடல் நடவடிக்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க சமர்ப்பித்த விடயங்களில் அமைச்சரவை கவனஞ்செலுத்தியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

You may like these posts

Comments