Contact Form

Name

Email *

Message *

2019 இல் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளல் - விசாரணை

2019ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Image


2019ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்குக் கிடைத்த மொத்த புள்ளிகளின் அறிக்கை தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும்

 நாட்டில் சமகாலத்தில் உள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் இந்தத் தகவல்களை துல்லியமாக பெற்றுக் கொள்ள முடியும். எனவே இது விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

You may like these posts

Comments