இலங்கை அரசினால் சர்வதேச ஆசிரியர் தினத்தில் சமூகத்திலும், பாடசாலை சமூகத்திலும், மாணவர்கள் மத்தியிலும் நற்பண்பு மிக்க சிறந்த ஆசிரியருக்காக "குரு பிரதீப பிரபா - 2018" விருதானது வருடாந்தம் வழங்கப்பட்டு வருகின்றது. இவ் விருதுக்காக ஒரு ஆசிரியரின் பல்வேறுபட்ட பாட, இணைப்பாடவிதான செயல்பாடுகளின் அடிப்படையிலும் பல்வேறு வரைமுறைகளின் அடிப்படையில் நாடு பூராகவும் அனைத்து கல்வி வலயங்களிலும் இருந்து சிறந்த ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு அவருக்கு விருதானது வழங்கப்படுகின்றது.
இவ்வருடத்துக்கான விருது வழங்கல் நிகழ்வானது கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 05.10.2018 திகதி வெள்ளிக்கிழமை அன்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் , திருக்கோவில் கோட்டத்தில் இருந்து திகோ/திருக்கோவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையின் நாடகமும் அரங்கியலும் பாட ஆசிரியருமான திரு.ருத்திரமூர்த்தி சுமன் அவருக்கு வழங்கப்பட்டது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!