Contact Form

Name

Email *

Message *

சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 2002 க.பொ.த சாதாரண தர அணி வெற்றிவாகை சூடியது

[ Sathu & NR] தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் 2001 வருட சாதாரண தர மற்றும் 2004 வருட உயர்தர மாணவர் ஒன்றியத்தினால் ஓர் சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் …

Image



[ Sathu & NR]

தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் 2001 வருட சாதாரண தர மற்றும் 2004 வருட உயர்தர மாணவர் ஒன்றியத்தினால் ஓர் சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நிகழ்வானது  31.03.2018  திகதி சனிக்கிழமை இன்றையதினம்  காலை 8.00 மணியளவில் தம்பிலுவில் ஆதவன் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது .


இப் போட்டி  அணிக்கு 11 வீரர்கள் 7 ஓவர் கொண்ட இப் போட்டியில் நான்கு வருட அணிகள் பங்கு பற்றின.  இப் போட்டியில் தம்பிலுவில் மத்திய கல்லூரியின் க.பொ.த சாதாரண தர வருடம்  1997, 2000, 2001 மற்றும் 2004 உயர் தரம்,  2002  அணிகள் பங்கு பற்றின.

இத்தொடரின் இறுதிப் போட்டி 2002 க.பொ.த சாதாரண தர அணிக்கும் மற்றும் 2001 வருட சாதாரண தர மற்றும் 2004 வருட உயர்தர அணிக்கும் நடைபெற்றது.  முதலில் துடுப்பெடுத்தாடிய 2002 க.பொ.த சாதாரண தர அணி 7 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 84 ஓட்டங்களை  பெற்றனர். பதிலுக்கு எதிர்த்தாடிய 2001 வருட சாதாரண தர மற்றும் 2004 வருட உயர்தர அணியினர் 7 ஓவர்களில் 7 விக்கட்  இழப்பிற்கு  66 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். இதனால் 21 ஓட்டங்களினால் இப்போட்டியில் 2002 க.பொ.த சாதாரண தர அணி வெற்றிவாகையினை சூடியது.  

போட்டியின்  ஆட்டநாயகனாகவும், தொடரின் ஆட்டநாயகனாகவும், 2002 க.பொ.த சாதாரண தர அணியின் ஜெயராஜ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற  அணிக்கு எமது தம்பிலுவில்.இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பான வாழ்த்துக்கள்.

இவ் சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நிகழ்வுக்கு அனுசரணையினை KMR Motors  திருக்கோவில் மற்றும் RN CD Home தம்பிலுவில்  மற்றும் New Sun Motor தம்பிலுவில்  ஆகியனவும்  ஊடகப்பங்களிப்பினை  எமது தம்பிலுவில்.இன்போ (thambiluvil.info) இணையக்குழு  வழங்குகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் பழைய மாணவர்கள் மத்தியில் தொடர்ச்சியான ஒன்றினைவையும், சகோதரத்துவத்தினையும் மற்றும் நட்புறவையும் ஏற்படுத்தும் வகையில் இப் போட்டி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
































You may like these posts

Comments