இன்று 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை, திருவெம்பாவை நோன்பு நிறைவு பெறுவதையொட்டி, நமது பகுதியில் அமைந்த சகல சைவாலயங்களிலும் அதிகாலை ஆருத்திரா தரிசனமும் தொடர்ந்து பொற்சுண்ணமிடித்தலும் ஆழிப்புனலாடலும் (சமுத்திர தீர்த்தம்) இடம்பெற்றது.
மார்கழித் திருவாதிரையான இன்றைக்கு, ஆலயங்களில் விசேட பிரசாதமாக, "திருவாதிரைக் களி" வழங்கப்படுவது மரபாகும்.
தம்பிலுவில் சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து, நடராசப்பெருமானும் சித்தி விநாயகரும், அடியவர்கள் வீதியில் நிறைகுடம் வைத்து வரவேற்க, ஊர்வலமாக எழுந்தருளி, தாழையடி சிவனாலய முன்றலில் தீர்த்தமாடினர்.
தீர்த்தம் நிறைவடைந்து சுவாமி திரும்பும்போது, பாரம்பரியம் மிக்க ஆடவரும் மகளிரும் "மஞ்சட்குளித்து விளையாடுதல்" நிகழ்வும் இடம்பெற்றது.
கூடவே, தமிழ் நாட்காட்டிப்படி, இன்று ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்த திதியாகவும் அமைவதால், தாழையடி சிவனாலயம் உள்ளிட்ட ஆலயங்களில், உறவினர்கள் அமுது கொடுத்தும், அன்னதானமளித்தும் சுனாமியில் மறைந்தவர்களை நினைவுகூர்ந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.