Contact Form

Name

Email *

Message *

நேற்றையதினம் இடம்பெற்ற கல்விச்சாதனையாளர்கள் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு

வரலாற்றுச் சிறப்புமிகு திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடிஅமாவாசை மகோற்சவ இறுதிநாள் அலங்கார உற்சவ  திருவிழாவில் வருடம் தோறும் இடம்பெறும் கல்விச்சாதனையாளர்க…

Image
வரலாற்றுச் சிறப்புமிகு திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடிஅமாவாசை மகோற்சவ இறுதிநாள் அலங்கார உற்சவ  திருவிழாவில் வருடம் தோறும் இடம்பெறும் கல்விச்சாதனையாளர்கள் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வானது இவ்வருடம் மூன்றாவது வருடமாக ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில் 22.07.2017 சனிக்கிழமை நேற்றையதினம் ஆலய முன்றலில் இடம்பெற்றது.



திருக்கோவில் வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து கடந்த வருடம் க.பொ.த. சாத பரீட்சைக்குத்தோற்றி 9ஏ(9A) சித்திகளைப்பெற்ற ஆறு(06) சாதனைமாணவர்களும் க.பொ.த.உயர்தர பரீட்சைக்குத்தோற்றி 3ஏ(3A) சித்திகளைப்பெற்ற ஆறு (06) சாதனை மாணவர்களும் பரிசு வழங்கி பாராட்டிக்கௌரவிக்கப்பட்டது.

இவ் விழாவின்  பரிசுகளுக்கான அனுசரணையை கடந்த 3வருடங்களாக இவ்வருடமும்  திருக்கோவில் மக்கள்வங்கிக்கிளை வழங்கியது. இவ் கல்விச்சாதனையாளர்கlin பாராட்டு விழாவிற்கு சிறப்பு  அதிதிகளாக   அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன், திருக்கோவில் உதவிப்பிரதேச செயலாளர் சீ.ஜெயரூபன், மக்கள்வங்கி முகாமையாளர் ஏ.ஜி.நிசாம், திருக்கோவில் பொலிஸ்நிலைப்பொறுப்பதிகாரி பண்டார,  திருக்கோவில் வைத்திய அத்தியட்சகர் மோகனகாந்தன் பாடசாலை அதிபர்கள்   மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ,  மாணவிகள் கலந்துகொண்டனர்.

பாராட்டுப்பெற்ற கல்விச்சாதனையாளர்கள்:

 9ஏ (9A) பெற்ற க.பொ.த.சாத கல்விச்சாதனையாளர்கள்:

1. கணேசமூர்த்தி ரதிஸ்ஷனா - தம்பிலுவில் மத்திய (தேசிய)கல்லூரி
2.கிருஸ்ணபிள்ளை சகிதன் - தம்பிலுவில் மத்திய (தேசிய)கல்லூரி
3.நற்குணராஜா ஹேமகாந்த்- தம்பிலுவில் மத்திய (தேசிய)கல்லூரி
4.ரவீந்திரராஜா ஆரவி – தம்பிலுவில் மத்திய (தேசிய)கல்லூரி
5.ரவிச்சந்திரன் பிறீத்தி –திருக்கோவில் மெ.மி.த.க.பாடசாலை
6.தவராஜா ஜலக்ஷா – கோரைக்களப்பு சக்தி வித்தியாலயம்.

3ஏ (3A) பெற்ற க.பொ.த.உயர்தர கல்விச்சாதனையாளர்கள்: 

1. தம்பிப்பிள்ளை நாவேந்தன் - பொறியியல்துறை- அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய கல்லூரி
2.தணிகாசலம் வினுராஜ் - மருத்துவத்துறை- அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய கல்லூரி
3.ஆறுமுகம் ஜெகன்- வர்த்தகத்துறை - தம்பிலுவில் மத்திய (தேசிய)கல்லூரி
4.அமிர்தராஜா லோகிதன் – கலைத்துறை- தம்பிலுவில் மத்திய (தேசிய)கல்லூரி
5.விஜயராசா பிதுர்சினி – வர்த்தகத்துறை- கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயம்.
6.சர்வானந்தம் தர்சனா – கலைத்துறை- கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயம்.





































































You may like these posts

Comments