Contact Form

Name

Email *

Message *

திருகோணமலை மல்லிகைத்தீவு சிறுமிகளின் பாலியல் துஷ்ப்பிரயோகத்தினை கண்டித்து தம்பிலுவில் தேசிய பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

[திருக்கோவில் நிருபர் ஏ.எஸ்.கே ] திருகோணமலை மல்லிகைத்தீவு சிறுமிகளின் பாலியல் துஷ்ப்பிரயோகத்தினை கண்டித்து தம்பிலுவில் தேசிய பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

Image
[திருக்கோவில் நிருபர் ஏ.எஸ்.கே ]

திருகோணமலை மல்லிகைத்தீவு சிறுமிகளின் பாலியல் துஷ்ப்பிரயோகத்தினை கண்டித்து தம்பிலுவில் தேசிய பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.


திருகோணமலை மல்லிகைத்தீவு பாடசாலை சிறுமிகளின் பாலியல் துஷ்ப்பிரயோகத்தினை கண்டித்து  திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட  தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்கள் நேற்று  02.05.2017 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டு இருந்தனர்.

இவ் கண்டன ஆர்ப்பாட்டத்தினை பாடசாலையின் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமை தாங்கி முன்னெடுத்ததுடன் சுமார் 200க்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு தமது கண்டன கோசங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

இவ் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவ,மாணவின் திருக்கோவில் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும்,பெரும் குற்றப் பொறுப்பதிகாரியுமான எஸ்.எம்.சதாத் அவர்களிடம் சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரிய மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.

இவ் மகஜரைப் பெற்றுக் கொண்ட திருக்கோவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் பெற்றோர்களும், பாதுகாவலர்களும் தமது பிள்ளைகள் தொடர்பான பாதுகாப்பினை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுடன் ஏதும் பிரச்சினைகள் ஏற்படுமிடத்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்படும் இடத்து மாணவர்களுக்கான பாதுகாப்பினை வழங்குவதற்கு பொலிசார் தயாரக இருப்பதாக அவர் இங்கு தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில் மாணவர்களுக்கு தொடர்ந்தும் இவ்வாறான துஷ்ப்பிரயோகள் இடம்பெறுவதனை பார்க்கின்ற போது சிறுவர்களின் பாதுகாப்பினை வலுவிழக்கச் செய்து வருவதனை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது.

இந்த நல்லாட்சி அரசாங்கம் சிறுவர்கள் தொடர்பாக சட்டங்கள் பற்றி குறிப்பிட்டு இருந்த போதிலும் நடைமுறைப் படுத்துவதில் காலதாமதங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இவ்வாறானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைகளை வழங்குவதன் ஊடாக சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.






You may like these posts

Comments