Contact Form

Name

Email *

Message *

மரண அறிவித்தல் - அமரர். சமலிக்காதேவி வன்னியசிங்கம்

மரண அறிவித்தல் - அமரர். சமலிக்காதேவி வன்னியசிங்கம் மலர்வு - 1954.08.19        உதிர்வு - 2017.06.10 அம்பாறை மாவட்ட திருக்கோவிலை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவு…

Image
மரண அறிவித்தல் -
அமரர். சமலிக்காதேவி வன்னியசிங்கம்

மலர்வு -1954.08.19        உதிர்வு - 2017.06.10

அம்பாறை மாவட்ட திருக்கோவிலை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். சமலிக்காதேவி  வன்னியசிங்கம்  அவர்கள் 10-06-2017  திகதி சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை அருளம்மா  தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வன்னியசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்   இந்திராதேவி, சுசீலாதேவி, பத்மாதேவி, விமலாதேவி சேனாதிராஜா, விஜயராஜா ஆகியோரின் அன்பு சகோதரியும்,  கிருபாகரன் , பிரியதர்சினி, ஆகியோரின் பாசமிகு அம்மாவும், வசந்தன், தட்சாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும், கிதுர்சிகாவின் அன்பு  அப்பம்மாவும் துவஸ்திகா, ஆருசன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்  ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் யாவும் 2017.06.13ம் திகதி Capital Funeral Home and cemetery 3700 prince of wales, ottawa, K2C3H1 ல் 11am - 3pm  வரை நடைபெறும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு-
பிரியா-  613-413-3291
கிருபாகரன்-  613-706-0391
வசந்தன்-  613-608-0892





அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பா எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.

You may like these posts

Comments