Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய திருமூலர் திருமடம் திறப்பு விழா

[N.Satu] திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வளாகத்தினுள் அமரர். திருமதி புஸ்பரதி கனகலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது மகன் ஐங்கரன் கனகலிங்கம்(அவுஸ்திரேலியா) …

Image
[N.Satu]

திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வளாகத்தினுள் அமரர். திருமதி புஸ்பரதி கனகலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது மகன் ஐங்கரன் கனகலிங்கம்(அவுஸ்திரேலியா) அவர்களினால் நிர்மானிக்க்கப்பட்ட திருமூலர் திருமடம் திறப்பு விழா நிகழ்வானது 27.05.2017 சனிக்கிழமை இன்று திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வளாகத்தில் ஆலய பரிபாலசபை தலைவர் திரு. சுந்தரலிங்கம் சுரேஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த விழாவுக்கு பிரதம விருந்தினர்களாக அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும், மற்றும்  அம்பாரை மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான உயர்திரு துஷித. பி.வணிகசிங்க அவர்களும், விசேட விருந்தினராக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே.விமலநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திருக்கோவில் பிரதேச செயலாளரும் இந்த ஆலய திருப்பணிச் சபையின் காப்பாளருமான திரு.எஸ்.ஜெகராஜன் அவர்களும், திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு.ஏ.எஸ்.கே.பண்டார ஆகியோர் இந்நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் ஆலய பரிபாலசபை வண்ணக்கர் திரு.வி.ஜயந்தன் மற்றும் ஆலய பரிபாலசபை செயலாளர் திரு.அ.செல்வராசா மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் இதன்போது ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு நடைபெற்று தொடர்ந்து ஞாபகார்த்த பலகை     திரை நீக்கமும் தொடர்ந்து மேலும் மண்டபத்திறப்பு விழாவும் மற்றும்   உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கும்  நிகழ்வும்  மற்றும்  கனகலிங்கம் குடுப்பத்தினரின் செய்தி மற்றும் திறப்பு விழா வாழ்த்துப்பாடல் மற்றும்
 மாணவர்களின் கலை  நிகழ்ச்சிகள் ஆகிய நிகழ்வுகள்  நடைபெற்றது .




















You may like these posts

Comments