Contact Form

Name

Email *

Message *

இலத்திரனியல்−பிரஜைகள் தகவல் மையம், வியாபார அபிவிருத்தி சேவைகள் பிரிவு அங்குரார்ப்பனம்

[NR] திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் யு.என்.டி.பி (UNDP- United Nation Development Programme) அமைப்பினறினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்ப…

Image
[NR]
திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் யு.என்.டி.பி (UNDP- United Nation Development Programme) அமைப்பினறினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டு அதனை மக்களின் பாவனைக்காக அங்குரார்ப்பனம் செய்து வைக்கும்  நிகழ்வு  திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெகராஜன் அவர்களின் தலைமையில் புதன்கிழமை 17.05.2017  நேற்றையதினம் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்   போது இலத்திரனியல் − பிரஜைகள் தகவல்  மையம் சேவைநிலையம் மற்றும் வியாபார அபிவிருத்தி சேவைகள் பிரிவு ஆகியன அங்குரார்ப்பனம் செய்து  வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக UNDP அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி திரு. ஜார்ன் சோரன்சன், UNDP அமைப்பின் அம்பாறை மாவட்டத்திற்கான திட்டமிடல் பணிப்பாளர்  திரு.எஸ்.மனோஷ் மற்றும் UNDP அமைப்பின் அம்பாறை மாவட்டத்திற்கான திட்டமிடல் பணிப்பாளர்  திரு. ரோகித மற்றும்  உதவி பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெயரூபன்,  பிரதேச செயலக கணக்காளர், திருக்கோவில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், மற்றும் சமுர்த்தி முகாமையாளர், மற்றும் நிர்வாக உத்தியோகத்தர், கிராம நிர்வாக உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,  பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் கலந்துகொண்டனர்.


































You may like these posts

Comments