Contact Form

Name

Email *

Message *

சமூக வலைத்தளங்கள் பயன்பாட்டினால் தனிமை உணர்வு அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பயன்பாடுகள் அதிகமாகும்போது தனிமை உணர்வு அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Image
பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பயன்பாடுகள் அதிகமாகும்போது தனிமை உணர்வு அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மயக்கவியல் துறை ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், தினசரி 2 மணி நேரத்துக்கு மேல் ஒருவர் சமூக வலைதள பயன்பாட்டில் இருந்தால், அது அவருக்கு சமூகத்தில் இருந்து தனிமைப்படும் உணர்வை அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.

சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படும் உணர்வால் இளைய தலைமுறையினரே அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதிகரிக்கும் சமூகவலைத்தளப் பயன்பாடுகள், இளைய தலைமுறையினரை நிஜஉலகில் இருந்து தனிமைப்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூகவலைதளங்களில் அதிக நேரம் செலவழிக்கும் இளைஞர்கள், நிஜ வாழ்வு உரையாடல்களில் செலவழிக்கும் நேரத்தை குறைத்துக் கொண்டதாகவும் அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 – 32 வயதுக்குட்பட்ட 2,000இற்கும் மேற்பட்டோரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

You may like these posts

Comments