Contact Form

Name

Email *

Message *

ஆசிரியர் சேவையில் 50 ஆயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை - கல்வி அமைச்சர்

ஆசிரியர் சேவையில் தற்பொழுது 50 ஆயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Image
ஆசிரியர் சேவையில் தற்பொழுது 50 ஆயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பதாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

238 பேருக்கு புதிய நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். கல்வியமைச்சில் இது தொடர்பான வைபவம் இடம்பெற்றது.

கல்வி அமைச்சர் அங்கு உரையாற்றுகையில்: ஆசிரியர் சேவையில் நியமனங்கள், பதவி உயர்வுகள் ஆகியன ஒழுங்கு விதிகளுக்கு அமைய மேற்கொள்ளப்படுவதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஆசிரியர் பயிற்சிக்காக வரவுசெலவுத் திட்டத்தில் இரண்டு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை பயிற்றுவிப்பாளர்களாக 3 ஆயிரத்து 850 பேரை பயிற்றுவித்து சேவையில் இணைத்துக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற எண்ணக்கருவிற்கு உட்பட்ட திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் கூறினார். இதற்காக 700 பாடசாலைகளில் பௌதீக வளங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் பாடசாலையை விட்டு & வெளியேறும் மாணவர்களை பாடசாலைக்கு உட்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்கு கொள்வதற்கான நடைமுறை முன்னெடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் மேலும் கூறினார்.

You may like these posts

Comments