Contact Form

Name

Email *

Message *

அம்பாறை மாவட்ட காணாமலாக்கப்பட்டோர் அமைப்பு திருக்கோவிலில் கவனயீர்ப்பு போராட்டம்

[திருக்கோவில் நிருபர் ஏ.எஸ்.கே  & Photos: NR] அம்பாறை மாவட்ட காணாமலாக்கப்பட்டோர் அமைப்பு  திருக்கோவிலில் கவனயீர்ப்பு போராட்டம்(Photos & Videos)

Image
[திருக்கோவில் நிருபர் ஏ.எஸ்.கே  & Photos: NR]

அம்பாறை மாவட்ட காணாமலாக்கப்பட்டோர் அமைப்பு  திருக்கோவிலில் கவனயீர்ப்பு போராட்டம்(Photos & Videos)


அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் ஏற்பாட்டில் திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் உள்ள கிராம அபிவிருத்தி கட்ட வளாகத்தில் 16.03.2017  இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் தலைவி தங்கராசா செல்வராணி அவர்களின் தலைமையில் அமைதியான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எட்டு அம்ச கோரியை முன்வைத்து தமது கவனயீர்பு போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்தனர்.

இலங்கை நிலைமாறுநீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான வடக்கு,கிழக்கு மக்கள் பரங்க மடல் எனும் தொனிப்பொருளில் மடல் தலைவியால் வாசிக்கப்பட்டு இலங்கை மனித உரிமை ஆணைக்குளுவின் கல்முனை மனித உரிமை ஆனைக்குழுவின் மாவட்ட பிராந்திய இணைப்பாளர் லத்தீப் இசைதீன் அவர்களிடம் போராட்டக்காரர்கள் சார்பான அமைப்பின் தலைவி த.செல்வராணி மகஜரை கையளித்தள்ளார்.

இவ் மகஜரைப் பெற்றுக் கொண்ட கல்முனை மனித உரிமை ஆனைக்குழுவின் மாவட்ட பிராந்திய இணைப்பாளர் லத்தீப் இசைதீன் கருத்து தெரிவிக்கையில் தான் இந்த மகஜரை கொழும்பு தலைமைக் காரியாலயத்தின் ஆனையாளர் மற்றும் தவிசாளர் ஆகியோருக்கு  அனுப்பி வைப்பதுடன் தங்களுக்கான ஒரு நியாயமான தீர்வுகள் கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்கு போராட்டகாரர்கள் சிலர் கருத்து தெரிவிக்கையில் தாம் தொடர்ந்து இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நடத்தி தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டி இருக்கின்ற போதிலும் இலங்கை அரசு உற்பட தங்களை யாரும் கண்டு கொள்வதாக இல்லையென்பதுடன்  உறவுகளை இழந்து பாதிக்கப்பட்ட எங்களை வைத்து சிலர் பிழைப்பு நடத்துவதாகவும் கவலை தெரிவித்தள்ளனர்.

இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பொத்துவில்,திருக்கோவில் ஆலையடிவேம்பு மற்றும் தமிழ் பிரதேசங்களில் இருந்து சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்கள் கலந்து கொண்டு தமது கண்ணீருக்கு நல்ல தீர்வு ஒன்றினை கோரி நின்றனர்.
புகைப்படங்கள் (Photos)  கீழே...


காணொளி(Videos)


























You may like these posts

Comments