
அக்கரைப்பற்று பிரதேசத்தில் விற்பனைச் செய்வதற்காக, 690 மில்லிகிராம் ஹெரோய்னை வைத்திருந்த பொத்துவிலைச் சேர்ந்த நபரொருவர் சனிக்கிழமை அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, பொதுமக்களுள் ஒருவர் போன்று நடத்த பொலிஸ் ஒருவர், தனக்கு ஹெரோய்ன் வேண்டும் என்று கூறி, சந்தேக நபரிடம் பணம் கொடுத்துள்ளார்.
இதன்போது, பொலிஸ் என்று தெரியாமல் ஹெரோய்ன் விற்ற குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!