திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழுள்ள விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தில் கல்வி பயிலும் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (04.02.2017) இடம்பெற்றது.அதிபர் எஸ்.பி.நாதன் தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளைத் தலைவரும் ஓய்வு நிலை பிரதிக் கல்விப்பணிப்பாளருமான எம்.விமலநாதன், சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளை செயலாளரும் வெல்லாவெளி கோட்டக் கல்விப் பணிப்பாளருமான பி.பாலச்சந்திரன், சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளை பொருளாளரும் ஓய்வு நிலை அதிபருமான பாவாணர் அக்கரைப்பாக்கியன், சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் உப தலைவரும் ஆசிரியருமா பி.கந்தசாமி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்





Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!