Contact Form

Name

Email *

Message *

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காரைதீவை சேர்ந்த இளைஞன் பலி

களுத்துறையில் சிறைக் கைதிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின்மீது இன்று (திங்கட்கிழமை) காலை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அம்பாறை காரைதீவை சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான சிவானந…

Image
களுத்துறையில் சிறைக் கைதிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின்மீது இன்று (திங்கட்கிழமை) காலை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அம்பாறை காரைதீவை சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான சிவானந்தம் தர்மீகன் உயிரிழந்துள்ளார்.

இவர் சமீபத்தில்தான் நியமனம் பெற்று சேவையில் இணைந்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் இரு சிறைச்சாலை அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மூன்று அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பா எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.

You may like these posts

Comments