Contact Form

Name

Email *

Message *

சிறைச்சாலை வாகனம் மீது நடந்த தாக்குதலில் 7 பேர் பலி

சிறைக் கைதிகளை அழைத்துச் சென்ற வாகனமொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 கைதிகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Image
சிறைக் கைதிகளை அழைத்துச் சென்ற வாகனமொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 கைதிகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

களுத்துறை சிறைச்சாலையிலிருந்து கடுவல நீதிமன்றத்திற்கு கைதிகளை அழைத்துச் சென்ற சிறைச்சாலை வாகனம் மீது இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது

இன்று திங்கள்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் இரு சிறைச்சாலை அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மூன்று அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான பாதள உலக குழு தலைவர் என கூறப்படும் அருண உதயசாந்த என்ற விளக்கமறியல் கைதியை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகனமொன்றில் வந்த குழுவொன்று இந்த துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காரைதீவை சேர்ந்த இளைஞன் பலி.




You may like these posts

Comments