Contact Form

Name

Email *

Message *

குடிநிலம் கிராமத்தில் நடைபெற்ற சிவராத்திரி நிகழ்வு - புகைப்படங்கள் & காணொளிகள்

சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தால் குடும்பத்தில் நன்மை பெருகும். மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசிதான் மகா சிவராத்திரி. எந்த ஓர் உயிருக்கும் ஆணவ குணம் சிறிதேனும் இருக்கும்.…

Image
சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தால் குடும்பத்தில் நன்மை பெருகும். மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசிதான் மகா சிவராத்திரி. எந்த ஓர் உயிருக்கும் ஆணவ குணம் சிறிதேனும் இருக்கும். அதற்கு தேவாதி தேவர்களும் விலக்கல்ல. தங்களின் ஆணவ குணம் அடக்கப்பட, அவர்கள் சிவபெருமானை வணங்கும் நாள் சிவராத்திரிதான். இப் பெருமையும், மகத்துவமும் மிக்க நன்னாளிலே குடிநிலம் கிராமத்தின் குடிநிலம் செல்வ விநாயகர் ஆலய பரிபாலனசபையினரும், மண்டானை பிள்ளையார் ஆலய நி௫வாகத்தின௫ம் இணைந்து ஏற்பாடு செய்த சிவராத்திரி நிகழ்வு தலைவர் சீனித்தம்பி தலைமையில் குடிநில பல்தேவை கட்டிடத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கண.இராசரெத்தினம்,  குடிநிலம், சாகாமம் பிரிவு  கிராம அலுவலர் திரு.எஸ்.பார்த்தீபன், திருக்கோவில் சமூக தரிசன ஒன்றியத்தின் ஸ்தாபகர் திரு.பி.நந்தபாலு, தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் ஆசிரியர் திரு ஜெயானந்தமூர்த்தி மற்றும்  குடிநிலம் செல்வ விநாயகர் ஆலய செயலாளர் பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டதுடன்.

மேலும் இந்நிகழ்வில் சிவராத்திரி விசேட பூஜை நிகழ்வுகளும், மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றதுடன். இதில் குடிநிலம் செல்வ விநாயகர் ஆலய பரிபாலனசபையினர், மண்டானை பிள்ளையார் ஆலய நி௫வாகத்தினர், மற்றும் குடிநிலம், மண்டானை பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புகைப்படங்கள்(Photos) , காணொளிகளுக்கு(Videos) கீழே செல்க:



























காணொளிகள் இங்கே (9 Videos)  :

 














 

You may like these posts

Comments