Contact Form

Name

Email *

Message *

சேவைநலன் பாராட்டு விழா - 2017

திருக்கோவில் மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயத்தின் முன்னைநாள் அதிபரும், இப் பாடசாலையின் வளர்ச்சிப் பாதையின் முன்னோடிகளின் ஒருவரான திரு. சாமுவேல் ஒலிவர் பிரபாகரன் அவர்களி…

Image
திருக்கோவில் மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயத்தின் முன்னைநாள் அதிபரும், இப் பாடசாலையின் வளர்ச்சிப் பாதையின் முன்னோடிகளின் ஒருவரான திரு. சாமுவேல் ஒலிவர் பிரபாகரன் அவர்களின் சேவைநலன் பாராட்டு விழா நிகழ்வானது 20.02.2017 இன்று திங்கட்கிழமை திருக்கோவில் மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயத்தின் கேட்போர் மண்டபத்தில் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் திரு. மா.கந்தப்பன் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னைநாள் அதிபர் திரு. சாமுவேல் ஒலிவர் பிரபாகரன் மற்றும் திருக்கோவில்  வலயக்கல்வி பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன், மற்றும் பிரதிகல்வி பணிப்பாளர் திரு.வை.ஜெயச்சந்திரன், பொத்துவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.சோ.இரவீந்திரன், ஓய்வுநிலை அதிபர் திருமதி.யோகா. யோகேந்திரன், ஓய்வுநிலை அதிபர் திரு.ஆர் எட்வேட் ஞானராஜா, தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் அதிபர் திரு.வ.ஜயந்தன், திருக்கோவில் மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு. ஏ.டி. ஜேம்ஸ்,  ஓய்வு பெற்ற கலாசார உத்தியோகத்தர் திரு.என்.எஸ். தியாகராஜா, ஓய்வுநிலை  உடற்கல்வி பணிப்பாளர் திரு.அ .செல்வராசா, ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் திரு.எம். பரராஜசிங்கம், ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இதன் போது  முன்னைநாள் அதிபர் திரு. சாமுவேல் ஒலிவர் பிரபாகரன் அவர்கட்கு திருக்கோவில் பொதுமக்கள் மற்றும் உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் இணைந்து பொன்னாடை போர்த்தியும், நினைவு சின்னமும் வழங்கி கௌரவித்தனர். மேலும் இதில் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.






































You may like these posts

Comments