(திருக்கோவில் நிருபர் ஏ-எஸ்.கே)அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட தாமரைக்குளம் பிரதேசத்தில் இரானுவ ஜீப் வாகனம் இன்று ஞாயிற்றுக்கிழமை 15ஆம் திகதி மரத்துடன் மோதியதில் மூவர் படுகாயம் அடைந்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
திருக்கோவில் சாகாமம் விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து விடுமுறைக்குச் செல்லும் இரானுவத்தினரை பொத்துவில் பிரதேசத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து முகாமிற்கு வேண்டிய பொருட்களை ஏற்றிக் கொண்டு சாகாம் நோக்கி வந்துகொண்டு இருந்த வேளை தாமரைக்குளம் பகுதியில் வேம்பு மரத்துடன் ஜீப் மோதுண்டுள்ளது.
இவ்விபத்தில் சாகாம் படைமுகாமின் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஜ.பி.ஜெயசிங்க வயது 53 உற்பட இரண்டு பொலிஸ் கான்ஸ்சபில் உற்பட மூவர் படுகாயமடைந்தள்ளனர். ஒருவர் அம்பாறை போதனா வைத்தியசாலைக்கும் ஏனைய இருவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கும் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் இருந்து மேலதிக அவசர சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!